டி.என்.பி.எல்.: ஷாருக்கான் அரைசதம்... கோவை கிங்ஸ் 160 ரன்கள் சேர்ப்பு
|திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை பேட்டிங்கை தேர்வு செய்தது.
சேலம்,
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கோவை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சுஜய் 27 ரன்களிளும், சுரேஷ் குமார் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் கை கோர்த்த ஷாருக்கான் - சச்சின் அணிக்கு வலு சேர்த்தனர்.
இதில் சச்சின் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து முகிலேஷ் 13, ஆதீக் உர் ரகுமான் 11 மற்றும் முகமது டக் அவுட் ஆகியும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஷாருக்கான் தனி ஆளாக போராடி அணி வலுவான நிலையை எட்ட உதவினார்.
20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த கோவை கிங்ஸ் 160 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாருக்கான் 55 ரன்கள் அடித்தார். திருப்பூர் தரப்பில் நடராஜன் மற்றும் அஜித் ராம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி திருப்பூர் பேட்டிங் செய்ய உள்ளது.