டி.என்.பி.எல்.: சேலம் ஸ்பார்டன்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் இன்று மோதல்
|இன்று நடைபெற உள்ள மற்றொரு ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.
திண்டுக்கல்,
8 அணிகள் இடையிலான 8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்றிரவு தொடங்கியது.
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி இன்று மாலை 3.15 மணிக்கு நடைபெற உள்ள முதலாவது ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள கோவை கிங்ஸ் அணியும், கடைசி இடத்தில் உள்ள சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதனைதொடர்ந்து இரவு 7.15 மணிக்கு நடைபெற உள்ள மற்றொரு ஆட்டத்தில் 4-வது இடத்தில் உள்ள திருச்சி கிராண்ட் சோழாஸ், 5-வது இடத்தில் உள்ள திருப்பூர் அணியை எதிர்கொள்கிறது. இது இந்த 2 அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இவ்விரு அணிகளும் மோத உள்ளன.