டி.என்.பி.எல்.: திருச்சிக்கு எதிராக டாஸ் வென்ற சேலம் பந்துவீச்சு தேர்வு
|இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
கோவை,
8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.
இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிமைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி திருச்சி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.