< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல் :  சேலம் அணிக்கு எதிரான போட்டியில் திருச்சி அணி பந்துவீச்சு தேர்வு

Image Tweeted By @TNPremierLeague

கிரிக்கெட்

டி.என்.பி.எல் : சேலம் அணிக்கு எதிரான போட்டியில் திருச்சி அணி பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
21 July 2022 7:06 PM IST

டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

சேலம்,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்று நடைபெறும் 24-வது ஆட்டத்தில் சேலம் ஸ்பைடன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் மோதுகின்றன. இரு அணிகளும் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பை இழந்ததால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

சேலம் தான் மோதிய 5 ஆட்டத்திலும் தோற்றுள்ளது. இதனால் இன்றாவது முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர் பார்க்கப்படு கிறது. திருச்சி அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

சேலம் ஸ்பார்டன்ஸ் (விளையாடும் லெவன்): கோபிநாத், அக்‌ஷய் சீனிவாசன், டேரில் ஃபெராரியோ, ரவி கார்த்திகேயன், எஸ் அபிஷிக், எஸ் கணேஷ், முருகன் அஷ்வின், எஸ் பூபாலன், ராஜேந்திரன் கார்த்திகேயன், லோகேஷ் ராஜ், ஜி பெரியசாமி

ரூபி திருச்சி வாரியர்ஸ் (விளையாடும் லெவன்): சந்தோஷ் ஷிவ், அமித் சாத்விக், நிதிஷ் ராஜகோபால், ஆதித்ய கணேஷ், அதீக் உர் ரஹ்மான், பி.சுகேந்திரன், பி.சரவண குமார், ரஹில் ஷா, அஜய் கிருஷ்ணா, எம்.எஸ்.சஞ்சய், எம்.மதிவண்ணன்.

மேலும் செய்திகள்