< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல் : நெல்லைக்கு எதிரான போட்டியில் திருச்சி அணி பந்துவீச்சு தேர்வு

Image Tweeted By @TNPremierLeague

கிரிக்கெட்

டி.என்.பி.எல் : நெல்லைக்கு எதிரான போட்டியில் திருச்சி அணி பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
15 July 2022 7:06 PM IST

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கோவை,

8 அணிகள் இடையிலான 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் நடந்து வருகிறது. கோவையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்து அசைக்க முடியாத அணியாக விளங்குகிறது. அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடி 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை உறுதி செய்ய நெல்லை அணி தீவிரம் காட்டும்.

ரஹில் ஷா தலைமையிலான திருச்சி அணி 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

ரூபி திருச்சி வாரியர்ஸ் (ஆடும் லெவன்): அமித் சாத்விக், முரளி விஜய், சந்தோஷ் ஷிவ், நிதிஷ் ராஜகோபால், ஆதித்ய கணேஷ், ஆண்டனி தாஸ், ரஹில் ஷா, பி சரவண குமார், எஸ் கோகுல் மூர்த்தி, அஜய் கிருஷ்ணா, ஆர் கணேஷ்

நெல்லை ராயல் கிங்ஸ் (ஆடும் லெவன்): லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், ஸ்ரீ நெரஞ்சன், பாபா அபராஜித், பாபா இந்திரஜித், ஜி அஜிதேஷ், சஞ்சய் யாதவ், என்எஸ் ஹரிஷ், ஜிதேந்திர குமார், எம் ஷாஜஹான், வி அதிசயராஜ் டேவிட்சன், கே ஈஸ்வரன்

மேலும் செய்திகள்