< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி.என்.பி.எல்: நெல்லை - சேலம் அணிகள் இன்று மோதல்
|11 July 2024 3:43 PM IST
சேலத்தில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் நெல்லை - சேலம் அணிகள் மோத உள்ளன.
சேலம்,
8வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், டி.என்.பி.எல். தொடரில் சேலத்தில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இரவு 7.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. புள்ளி பட்டியலில் சேலம் அணி 3வது இடத்திலும் , நெல்லை அணி 4வது இடத்திலும் உள்ளது.