< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல்.: நெல்லை - மதுரை அணிகள் இன்று மோதல்

image courtey: twitter/@TNPremierLeague

கிரிக்கெட்

டி.என்.பி.எல்.: நெல்லை - மதுரை அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
15 July 2024 1:14 PM IST

டி.என்.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கோவை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிமைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடரின் இன்றைய ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- மதுரை பாந்தர்ஸ் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்