< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி.என்.பி.எல் : திருப்பூர் அணிக்கு எதிராக நெல்லை பந்துவீச்சு தேர்வு
|24 July 2024 7:14 PM IST
டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
நெல்லை,
8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந்தேதி சேலத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் நடைபெற்றது. தற்போது நெல்லையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் 3-வது கட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.