< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல் வெளியேற்றுதல் சுற்று : டாஸ் வென்ற மதுரை அணி பேட்டிங் தேர்வு

Image Courtesy : Twitter @TNPremierLeague

கிரிக்கெட்

டி.என்.பி.எல் வெளியேற்றுதல் சுற்று : டாஸ் வென்ற மதுரை அணி பேட்டிங் தேர்வு

தினத்தந்தி
|
26 July 2022 7:00 PM IST

வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சேலம்,

6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

இந்த நிலையில் இன்று இரவு 7.15 மணிக்கு சேலத்தில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்சை எதிர்கொள்கிறது. இதில் தோற்கும் அணி வெளியேறும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்கும் அணியுடன் மோதும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணியின் கேப்டன் சதுர்வேத் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இரு அணிகளும் களம் காண்கின்றன.

மதுரை பாந்தர்ஸ் (விளையாடும் லெவன்): வி ஆதித்யா, அருண் கார்த்திக், பால்சந்தர் அனிருத், ஜெகதீசன் கவுசிக், ரித்திக் ஈஸ்வரன், என்எஸ் சதுர்வேத், சன்னி சந்து, பி சரவணன், கிரண் ஆகாஷ், வருண் சக்கரவர்த்தி, வி கவுதம்

லைகா கோவை கிங்ஸ் (விளையாடும் லெவன்) : கங்கா ஸ்ரீதர் ராஜு, ஜே சுரேஷ் குமார், சாய் சுதர்சன், ஷாருக் கான், அபிஷேக் தன்வர், யு முகிலேஷ், ஷிஜித் சந்திரன், பாலு சூர்யா, எஸ் அஜித் ராம், ஆர் திவாகர், மணீஷ் ரவி

மேலும் செய்திகள்