< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டிஎன்பிஎல் : திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை அணி பந்துவீச்சு தேர்வு
|7 July 2022 7:06 PM IST
டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
திண்டுக்கல்,
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 13-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் -மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
திண்டுக்கல் அணி விளையாடிய 4 போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.மதுரை பாந்தர்ஸ் விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியமானதாகும்.