டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்று : டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சு தேர்வு
|டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
கோவை,
6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதில் கோவையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்சும் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த நெல்லை அணி முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களுக்குள் வந்ததால் அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. இறுதி போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் தீவிர முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
லைகா கோவை கிங்ஸ் (விளையாடும் லெவன்): கங்கா ஸ்ரீதர் ராஜு, ஜே சுரேஷ் குமார், சாய் சுதர்சன், ஷாருக் கான், அபிஷேக் தன்வர், யு முகிலேஷ், ஷிஜித் சந்திரன், பாலு சூர்யா, எஸ் அஜித் ராம், ஆர் திவாகர், மணீஷ் ரவி
நெல்லை ராயல் கிங்ஸ் (விளையாடும் லெவன்): ஹரிஷ், லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், பாபா இந்திரஜித், ஜி அஜித், ஸ்ரீ நெரஞ்சன், எம் ஷாஜகான், கார்த்திக் மணிகண்டன், வி அதிசயராஜ் டேவிட்சன், கே ஈஸ்வரன்