< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல்.: ஜெகதீசன் அரைசதம்..சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 166 ரன்கள் சேர்ப்பு

image courtesy: twitter/@TNPremierLeague

கிரிக்கெட்

டி.என்.பி.எல்.: ஜெகதீசன் அரைசதம்..சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 166 ரன்கள் சேர்ப்பு

தினத்தந்தி
|
7 July 2024 4:55 PM IST

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜெகதீசன் 63 ரன்கள் குவித்தார்.

சேலம்,

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நெல்லை பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சந்தோஷ் குமார் - ஜெகதீசன் இணை நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். 58 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாடிய சந்தோஷ் குமார் 41 ரன்களில் அவுட் ஆனார். அவரைதொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபா அபராஜித் 24 ரன்களிலும், சித்தார்த் 17 ரன்களிலும், அபிஷேக் தன்வார் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ஜெகதீசன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இதன்மூலம் சேப்பாக் வலுவான இலக்கை நோக்கி நகர்ந்தது.

20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக ஜெகதீசன் 63 ரன்கள் குவித்தார். நெல்லை தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெல்லை பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்