< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: திண்டுக்கல் அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக்

Image Courtesy : @supergillies

கிரிக்கெட்

டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: திண்டுக்கல் அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக்

தினத்தந்தி
|
31 July 2024 8:54 PM IST

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது.

திண்டுக்கல்,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் சந்தோஷ் ஒரு ரன்னில் அவுட்டாகி வெளியேற, அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபா அபராஜித்துடன், ஜெகதீசன் ஜோடி சேர்ந்தார். இதில் பாபா அபரஜித் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.

ஜெகதீசன் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரதோஷ் ரஞ்சன் பவுல் 19 ரன்களில் ரன் அவுட் ஆனார். நிலைத்து நின்று அதிரடி காட்டிய பாபா அபராஜித், 72 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்தது. திண்டுக்கல் அணியில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி, விக்னேஷ் மற்றும் சுபோத் பட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் அணி விளையாடி வருகிறது.

மேலும் செய்திகள்