< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி.என்.பி.எல்: திருப்பூர் அணிக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு...!
|28 Jun 2023 6:52 PM IST
டிஎன்பிஎல் தொடரில் லைக்கா கோவை கிங்ஸ் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
சேலம்,
8 அணிகள் பங்கேற்கும் 7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 19-வது 'லீக்' ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இதில் கோவை அணி 79 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற 5-வது வெற்றியாகும்.
இதன் மூலம் 10 புள்ளிகளுடன் கோவை கிங்ஸ் முதல் அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது. டி.என்.பி.எல். தொடரின் 20-வது 'லீக்' ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.