< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல்: திண்டுக்கல் - திருச்சி அணிகள் இன்று மோதல்
கிரிக்கெட்

டி.என்.பி.எல்: திண்டுக்கல் - திருச்சி அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
6 July 2024 12:48 PM IST

8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று சேலத்தில் தொடங்கியது

சேலம்,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். கிரிக்கெட் 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 7 சீசன் நடந்துள்ளது. 8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நேற்று சேலத்தில் தொடங்கியது . சேலம், நெல்லை, கோவை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய 5 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்