< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல்: திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் இன்று மோதல்

Image Courtesy: @TNPremierLeague

கிரிக்கெட்

டி.என்.பி.எல்: திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
21 July 2024 11:10 AM IST

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.

நெல்லை,

8 அணிகள் இடையிலான 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி என் பி எல்) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல் 9 லீக் ஆட்டங்கள் சேலத்திலும், அடுத்த 8 லீக் ஆட்டங்கள் கோவையிலும் நடந்தது.

முதல் 2 சுற்று ஆட்டம் முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து தொடரின் 3வது சுற்று லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதில் மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 7.15 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இரு ஆட்டங்களும் நெல்லையில் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்