டி.என்.பி.எல். கிரிக்கெட்: ஜாபர் ஜமால் அதிரடி - நெல்லை அணிக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திருச்சி
|முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.
நெல்லை,
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் திருச்சி - நெல்லை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்ய செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராஜ்குமார் 2 ரன்களிலும், சரண் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். திருச்சி அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
இதனால் போட்டி நிறுத்தப்பட்டு, மழை நின்ற பின் 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. இதையடுத்து கங்கா ஸ்ரீதர் 18 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஆர்.ராஜ்குமார் 3 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ஜாபர் ஜமால் அரைசதத்தைக் கடந்து அசத்தினார்.
தொடர்ந்து 6 பவுண்டரிகளையும், 8 சிக்சர்களையும் விளாசிய ஜாபர் ஜமால் 96 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியாக திருச்சி அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இதையடுத்து நெல்லை அணி 147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடுகிறது.