< Back
கிரிக்கெட்
டிஎன்பிஎல் கிரிக்கெட்: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்..!
கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்..!

தினத்தந்தி
|
25 July 2022 5:32 AM IST

சேலத்தில் நாளை நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் மதுரை-கோவை அணிகள் மோதுகின்றன.

சேலம்,

6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இரவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை சாய்த்தது. முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்றிருந்த சேலம் அணிக்கு கடைசி லீக்கில் முதல் வெற்றி கிடைத்திருக்கிறது.

நேற்றுடன் லீக் சுற்று முடிவடைந்து விட்ட நிலையில் புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சேலத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் மதுரை-கோவை அணிகள் மோதுகின்றன.

அதைத் தொடர்ந்து 27-ந் தேதி நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நெல்லை- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2-வது தகுதி சுற்று 29-ந்தேதியும், இறுதிப்போட்டி 31-ந்தேதியும் கோவையில் நடக்கிறது.

மேலும் செய்திகள்