< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லை ராயல் கிங்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் இன்று மோதல்
|5 July 2022 2:44 PM IST
இன்று 10-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 10-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இதுவரை விளையாடிய போட்டியில் தோற்கவில்லை மதுரை அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ்) வெற்றி பெற்று இருந்தது. ஹாட்ரிக் வெற்றிக்காக அந்த அணி காத்திருக்கிறது. நெல்லை அணி தான் மோதிய 3 போட்டிகளிலும (சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ்) வெற்றி பெற்றது.