< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி.என்.பி.எல். கிரிக்கெட்: 2-வது தகுதி சுற்றில் நெல்லை-கோவை அணிகள் இன்று மோதல்
|29 July 2022 6:11 AM IST
டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்றில் நெல்லை-கோவை அணிகள் இன்று மோதுகின்றன.
கோவை,
6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதில் கோவையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்சும் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த நெல்லை அணி முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களுக்குள் வந்ததால் அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதே சமயம் வெளியேற்றுதல் சுற்றில் மதுரையை விரட்டியடித்த கோவை அணி உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் இறங்குகிறது. ஏற்கனவே லீக் சுற்றில் நெல்லையை 5 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.