< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல். கிரிக்கெட்; - தொடர் நாயகன் மற்றும் ஆரஞ்சு கேப் விருது வென்ற நெல்லை அணி வீரர்....!!

image courtesy;twitter/@TNPremierLeague

கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்; - தொடர் நாயகன் மற்றும் ஆரஞ்சு கேப் விருது வென்ற நெல்லை அணி வீரர்....!!

தினத்தந்தி
|
13 July 2023 10:31 AM IST

டி.என்.பி.எல். தொடரின் தொடர் நாயகன் விருது மற்றும் அதிக ரன் எடுத்தவருக்கான ஆரஞ்சு கேப் விருதை நெல்லை அணியின் அஜிதேஷ் குருசாமி வென்றார்.

நெல்லை:

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. சுரேஷ் குமார், அதீக் ரஹ்மான், முகேஷ் அரை சதமடித்தனர். அடுத்து ஆடிய நெல்லை அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில்,இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது 4 விக்கெட் வீழ்த்திய கோவை அணியின் ஜத்வேத் சுப்ரமணியத்திற்க்கு வழங்கப்பட்டது..

டி.என்.பி.எல். தொடரின் தொடர் நாயகன் விருது மற்றும் ஆரஞ்சு கேப் விருதை நெல்லை அணியின் அஜிதேஷ் குருசாமி வென்றார்.இவர் இந்த தொடரில் மொத்தம் 1 சதம் ,3 அரைசதம் உட்பட 385 ரன்கள் குவித்து உள்ளார்.

அதிக விக்கெட் எடுத்தவருக்கு அளிக்கப்படும் பர்பிள் கேப் விருது 17 விக்கெட்டுகள் வீழ்த்திய கோவை அணி கேப்டன் ஷாருக் கானுக்கு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்