< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல்-மதுரை அணிகள் இன்று மோதல்
கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல்-மதுரை அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
26 July 2024 5:25 AM IST

இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

திண்டுக்கல்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி என் பி எல்) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் மூன்று கட்ட லீக் ஆட்டங்கள் சேலம், கோவை, நெல்லையில் நடந்தது.

இதுவரை நடப்பு சாம்பியன் கோவை கிங்சும் (10 புள்ளி), முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கிங்சும் (8 புள்ளி) பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய இரு இடம் யாருக்கு என்பது அடுத்த சுற்று லீக் முடிவில் தெரிய வரும்.

இந்த நிலையில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 24-வது லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்