< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல். கிரிக்கெட்; சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதல்

Image Courtesy: @TNPremierLeague

கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்; சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
14 July 2024 7:42 AM GMT

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோத உள்ளன.

கோவை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிமைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 3 லீக் ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில், 2 ஆட்டங்களில் ஆடியுள்ள திண்டுக்கல் அணி 1 வெற்றி, 1 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் தங்களது 2வது வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த ஆட்டத்திற்கு முன்னதாக நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3.15 மணிக்கு நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்