< Back
கிரிக்கெட்
டிஎன்பிஎல் : திருப்பூர் அணிக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Image Tweeted By @TNPremierLeague

கிரிக்கெட்

டிஎன்பிஎல் : திருப்பூர் அணிக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

தினத்தந்தி
|
22 July 2022 9:17 PM IST

திருப்பூர் அணி 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. தற்போது கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடக்கிறது. இன்று நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமலும், கேப்டன் கவுசிக் காந்தி 2 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ராதாகிருஷ்ணன் -சாய் கிஷோர் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் இந்த ஜோடி வெகு நேரம் நீடிக்கவில்லை. ராதாகிருஷ்னன் (24) , சாய் கிஷோர் (19) ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தனர். இருப்பினும் பின்வரிசையில் சிறப்பாக விளையாடிய சசிதேவ் 45 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.

மேலும் செய்திகள்