< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பந்துவீச்சு அணிக்கு நேர கட்டுப்பாடு - புதிய விதியை அறிமுகப்படுத்தும் ஐசிசி
|21 Nov 2023 7:20 PM IST
புதிய விதியை சோதனை அடிப்படையில் அமல்படுத்த ஐசிசி முடிவு செய்துள்ளது.
துபாய்,
சர்வதேச ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையே பந்துவீச்சு அணி எடுத்துக்கொள்ளும் நேரத்தை கட்டுப்படுத்த புதிய விதியை சோதனை அடிப்படையில் அமல்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
புதிய விதிமுறைப்படி ஒரு ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும். இந்த நேரக்கட்டுப்பாட்டை 3 முறை மீறினால் பந்துவீச்சு அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும் என்ற புதிய விதியை ஐசிசி அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.