< Back
கிரிக்கெட்
இந்தியா -தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

கோப்புப்படம் 

கிரிக்கெட்

இந்தியா -தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் 'விற்றுத் தீர்ந்தன

தினத்தந்தி
|
1 Oct 2022 6:58 AM IST

கவுகாத்தியில் நடைபெறவிருக்கும் இந்தியா -தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் 'விற்றுத் தீர்ந்தன.

கவுகாத்தி,

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை கவுகாத்தியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகி விட்டதாக அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

டிக்கெட்டுகள் விற்கப்பட்ட வெளிப்படையான முறை கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது என்று அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கத்தின் (ஏசிஏ) செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்தார்

மேலும் செய்திகள்