சென்னை - டெல்லி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் நாளை விற்பனை..!
|சென்னை-டெல்லி அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.
சென்னை,
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத் தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 10-ம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ள சென்னை - டெல்லி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மே 8-ந் தேதி) தொடங்குகிறது. ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் காலை 9.30 மணி முதல் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ1,500, ரூ 2,000, ரூ 2,500 டிக்கெட்டுகளை இணையதளத்திலும்&நேரிலும் வாங்கிக்கொள்ளலாம் எனவும் ரூ 3,000, ரூ 5,000 டிக்கெட்டுகள் இணையத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறுவிக்கப்பட்டுள்ளது.