< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்...!
|23 May 2023 10:09 AM IST
ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது.
அகமதாபாத்,
16வது ஐபிஎல் சீசன் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. தொடரின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று சென்னையில் தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
தொடரில் நாளை எலிமினேட்டர் ஆட்டமும், வரும் 26ம் தேதி 2ம் தகுதி சுற்று ஆட்டமும், தொடரின் இறுதிப்போட்டி வரும் 28ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.