< Back
கிரிக்கெட்
தோனியை நாம் பார்ப்பது இது கடைசி கிடையாது - மேத்யூ ஹெய்டன்
கிரிக்கெட்

தோனியை நாம் பார்ப்பது இது கடைசி கிடையாது - மேத்யூ ஹெய்டன்

தினத்தந்தி
|
20 May 2024 7:37 PM IST

அடுத்த வருடம் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் போன்ற ஏதேனும் ஒரு பதவியில் சென்னை அணியுடன் தோனி இல்லாமல் போனால் தமக்கு ஆச்சரியமாக இருக்கும் என்று ஹெய்டன் கூறியுள்ளார்.

சென்னை,

நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. முன்னதாக இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் ஒப்படைத்த தோனி சாதாரண விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடினார். அத்துடன் முழங்கால் வலியால் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே விளையாடிய அவர் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடி முடித்து விட்டார் என்று மேத்யூ ஹெய்டன் உறுதியாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அடுத்த வருடம் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் போன்ற ஏதேனும் ஒரு பதவியில் சென்னை அணியுடன் தோனி இல்லாமல் போனால் தமக்கு ஆச்சரியமாக இருக்கும் என்று ஹெய்டன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"அது முடிந்து விட்டது என்று நினைக்கிறேன். தோனி விளையாடியது இதுவே கடைசி ஐ.பி.எல். என்று நானும் நம்புகிறேன். இருப்பினும் தோனியை நாம் பார்ப்பது இது கடைசி கிடையாது. சி.எஸ்.கே. குடும்பத்தில் தோனி ஒரு அங்கமாக அல்லது ஆலோசகராக இல்லாமல் போனால் நான் ஆச்சரியப்படுவேன். அவர் எப்போதும் தன்னுடைய அறிவை கிரிக்கெட்டில் பயன்படுத்துகிறார். அந்த வகையில் எம்.எஸ். தோனி எனும் பவர் எப்போதும் அங்கே இருக்கும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்