< Back
கிரிக்கெட்
இந்திய அணிக்காக நான் தேர்வானதும் ராகுல் டிராவிட் என்னிடம் கூறிய அறிவுரை இது தான் - ஜித்தேஷ் சர்மா
கிரிக்கெட்

இந்திய அணிக்காக நான் தேர்வானதும் ராகுல் டிராவிட் என்னிடம் கூறிய அறிவுரை இது தான் - ஜித்தேஷ் சர்மா

தினத்தந்தி
|
17 July 2023 4:20 PM IST

ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியில் ஜித்தேஷ் சர்மா இடம் பிடித்துள்ளார்.

மும்பை,

சீனாவில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக இளம் வீரர்களை கொண்ட கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் விக்கெட் கீப்பர்களாக பஞ்சாப் அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரப்சிம்ன்ரன் சிங், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

இந்நிலையில், முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வான போது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனக்கு ஒரு அறிவுரையை கூறியதாகவும், அது என்ன? என்பது குறித்த தகவலை தற்போது ஜித்தேஷ் சர்மா கூறியதாவது,

ராகுல் டிராவிட் சாருடன் நான் நிறைய ஆலோசனையில் ஈடுபட்டேன். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் நான் முதன் முறையாக இந்திய அணிக்கு தேர்வான போது டிராவிட் சார் என்னிடம், நீ விளையாடும் பேட்டிங் முறையை மாற்ற வேண்டாம்.

உன்னுடைய ஸ்டைலிலேயே நீ பேட்டிங் செய், உன்னை போன்ற ஒரு வீரரை தான் நாங்கள் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்திற்காக தேடி வருகிறோம் இவ்வாறு டிராவிட் தம்மிடம் கூறியதாக ஜித்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்