< Back
கிரிக்கெட்
பிராவோவுக்கு சரியான மாற்று வீரர் இவர் தான் - இர்பான் பதான்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

பிராவோவுக்கு சரியான மாற்று வீரர் இவர் தான் - இர்பான் பதான்

தினத்தந்தி
|
14 May 2023 2:44 PM IST

2011-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய பிராவோ கடந்த சீசனுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றார்.

சென்னை,

நடப்பு ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் சென்னை அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இன்று சென்னையில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னை சென்னை பந்துவீச்சில் மிகவும் பலவீனமாக அணியாக தோன்றியது. அதிலும் இறுதிகட்ட ஓவர்களை யார் வீசுவார்கள் என்ற பெரிய கேள்வியும், பிராவோவின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்தது.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக சென்னை அணி நிர்வாகம் பென் ஸ்டோக்சை ஏலத்தில் எடுத்தது. ஆனால் சில ஆட்டங்களில் ஆடிய அவர் காயம் காரணமாக ஆடவில்லை. இந்நிலையில் சென்னை அணியின் டெத் ஓவர் பந்துவீச்சாளர் யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக தனது பந்துவீச்சின் மூலம் அதற்கு பதில் அளித்து வருகிறார் இலங்கையை சேர்ந்த மதீஷா பதிரனா.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் மதீஷா பதிரனா. இலங்கையை சேர்ந்த இவர் 8 ஆட்டத்தில் விளையாடி 13 விக்கெட் கைப்பற்றி உள்ளார். டெத் ஓவர் என்று அழைக்கப்படும் கடைசி கட்ட ஓவர்களில் இவர் மிகவும் சிறப்பாக பந்து வீசுகிறார்.

இந்த நிலையில் சி.எஸ்.கே. அணியில் பிராவோவுக்கு சரியான மாற்று வீரர் பதிரனா என்று இர்பான் பதான் தெரிவித்து உள்ளார். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

ஒவ்வொரு அணியும் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பவுலர்களை எதிர்நோக்குகிறது. சி.எஸ்.கே. அணியில் பதிரனா இருக்கிறார். பிராவோவுக்கு சரியான மாற்று வீரர் பதிரனா ஆவார். அவர் மிகவும் நேர்த்தியாக பந்து வீசுகிறார்.

இவ்வாறு இர்பான் பதான் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் முதல் 3 சீசனிலும் பிராவோ மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். 2011-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார். கடந்த ஆண்டு வரை அவர் விளையாடி வந்தார். இந்த முறை ஓய்வு பெற்றார். சி.எஸ்.கே. அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அவர் தற்போது இருக்கிறார். டெத் ஓவரில் பந்து வீசுவதில் பிராவோ கெட்டிக்காரர்.

இதனால் தான் அவருக்கு சரியான மாற்று வீரராக சி.எஸ்.கே. அணி பதிரனாவை தேர்வு செய்துள்ளதாக இர்பான் பதான் கூறியுள்ளார். பிராவோ 183 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்தில் உள்ளார். இந்த சீசனில் தான் யசுவேந்திர சாஹல் அவரது சாதனையை முறியடித்து 187 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.


மேலும் செய்திகள்