< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகள்தான் விளையாடும் - நாதன் லயன் பேட்டி
கிரிக்கெட்

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகள்தான் விளையாடும் - நாதன் லயன் பேட்டி

தினத்தந்தி
|
31 Oct 2023 7:24 AM IST

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 6 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அனைத்து அணிகளுக்கும் இன்னும் தலா 3 போட்டிகளே உள்ள நிலையில் அரையிறுதிக்கு செல்ல அனைத்து அணிகளும் தீவிரமாக முயற்சி செய்யும்.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

உண்மையாக இந்த முறை ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதும் என்று நான் நம்புகிறேன். அதில் கோப்பையை வெல்ல இந்தியா நம்பர் ஒன் அணியாக இருக்கும் என்பதால் அப்போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

அதே சமயம் வேன் டெர் டுசன், எய்டன் மார்க்ரம், க்ளாசன், டேவிட் மில்லர் ஆகியோர் அடங்கிய தென் ஆப்பிரிக்காவும் மிகுந்த ஆபத்தான அணியாக இருக்கிறது. மறுபுறம் சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மொத்த இந்திய ரசிகர்களிடம் இருக்கிறது.

அதனால் அழுத்தத்தை கொண்டுள்ள இந்தியாவுக்கு எதிராக இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பெரிய ரன்கள் அடித்து கோப்பையை வெல்லும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்