< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் இவை தான் - இயான் மோர்கன் கணிப்பு

Image Courtesy : AFP

கிரிக்கெட்

உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் இவை தான் - இயான் மோர்கன் கணிப்பு

தினத்தந்தி
|
6 Aug 2023 1:10 PM IST

உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் தனது கருத்துகளை கூறியுள்ளார்.

லண்டன்,

இந்தியாவில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

உலகக்கோப்பை தொடர் குறித்தும், அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்தும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த இயான் மோர்கன் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் அணிகள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

இந்த தொடரின் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து ஒரு அணியாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதே போல இந்தியாவும் அங்கே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இவைகளை தவிர்த்து ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் கோப்பையை வெல்வதற்கான திறமையை கொண்டுள்ளன.

எனவே இந்த மிகப்பெரிய போட்டி நிறைந்த தொடரில் நான் குறிப்பிட்ட முதலிரண்டு அணிகள் கோப்பையை வெல்வதற்கு வலுவான அணிகளாகவும் எஞ்சிய 2 அணிகள் சவாலை கொடுக்கும் அணிகளாகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்