இந்த 3 பேர் தான்...நான் விளையாடியதில் சிறந்த எதிரணி வீரர்கள் - நாதன் லயன்
|பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி வரும் 3ம் தேதி தொடங்க உள்ளது.
சிட்னி,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் அந்த 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 3ம் தேதி சிட்னியில் தொடங்க உள்ளது. இதையடுத்து இரு அணி வீரர்களும் சிட்னியில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நான் விளையாடியதில் சிறந்த எதிரணி பேட்ஸ்மேன்கள் யாரென்றால் அது விராட், சச்சின், டிவில்லியர்ஸ் தான் என ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிட்னி மைதானத்தின் சமூக வலைதள பக்கத்தில் நாதன் லயன் கூறியதாவது,
நான் விளையாடியதில் சிறந்த எதிரணி வீரர் யார் என்ற கேள்வி மிகவும் கடினமானது. சில ஜாம்பவான்களுக்கு எதிராக நான் விளையாடியுள்ளேன். அதிலிருந்து உங்களுக்கு 3 பெயர்களை தருகிறேன். அவர்கள் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் டி வில்லியர்ஸ்.
மேலும், அவர்களுடைய தடுப்பாட்டத்திற்கு எதிராக நான் நீண்ட நேரம் சவாலை கொடுக்க முயற்சித்ததே அவர்களை அவுட்டாக்கியதன் பின்னணியில் இருக்கும் ரகசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.