< Back
கிரிக்கெட்
அந்த இளம் வீரர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் - ரெய்னா
கிரிக்கெட்

அந்த இளம் வீரர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் - ரெய்னா

தினத்தந்தி
|
15 Jan 2024 5:56 PM IST

டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.

இந்தூர்,

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 68 ரன், ஷிவம் துபே 63 ரன் எடுத்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் ஜெய்ஸ்வால் கண்டிப்பாக அணியில் இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,' ஜெய்ஸ்வால் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடுவதற்கு தயங்குவதில்லை. அதே எண்ணத்துடன்தான் டி20 உலகக்கோப்பையிலும் அவர் விளையாடுவார். இங்கே நல்ல செய்தி என்னவெனில் 2024 டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஏற்கனவே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் அங்கே டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்துள்ளார். இதனால் அவர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்" என்று கூறினார்

மேலும் செய்திகள்