< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பையையும் கையில் ஏந்துவேன் - ரிங்கு சிங் பேட்டி

image courtesy: @rinkusingh235 / @kkriders

கிரிக்கெட்

உலகக்கோப்பையையும் கையில் ஏந்துவேன் - ரிங்கு சிங் பேட்டி

தினத்தந்தி
|
28 May 2024 7:27 AM IST

ஐ.பி.எல். கோப்பையை போல் டி20 உலகக் கோப்பையையும் கையில் ஏந்துவேன் என்று கொல்கத்தா ஆட்டக்காரர் ரிங்கு சிங் கூறியுள்ளார்.

சென்னை,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் மாற்று ஆட்டக்காரராக இடம் பெற்றுள்ள ரிங்கு சிங்கு ஓரிரு நாட்களில் அமெரிக்கா கிளம்புகிறார். அவர் கூறுகையில்,

நான் முதலில் நொய்டா செல்ல உள்ளேன். அதன் பிறகு அமெரிக்காவுக்கு புறப்படுகிறேன். உலகக் கோப்பையையும் நான் தூக்கிப்பிடிப்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். கொல்கத்தா அணியின் வெற்றிக்கு ஒருவரை மட்டும் பாராட்ட முடியாது. ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்துள்ளோம்.

கம்பீர் ஆலோசகராக வந்த பிறகு நிறைய விஷயங்கள் மாறி விட்டன. சுனில் நரேன் தொடக்க ஆட்டக்காரராக இறக்கப்பட்டார். அதற்கு ஏற்ப அவரும் பேட்டிங்கில் நன்றாக ஆடினார். அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்