< Back
கிரிக்கெட்
2023-ம் ஆண்டிற்கான சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதை பெறும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்

Image Courtesy: @ICC/icc-cricket.com

கிரிக்கெட்

2023-ம் ஆண்டிற்கான சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதை பெறும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்

தினத்தந்தி
|
24 Jan 2024 2:39 PM IST

2023-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனையாக வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்து இருந்தது.

அதன்படி இந்த விருதுக்கு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ், ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி, இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் மற்றும் இலங்கையின் சாமரி அதபத்து ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

இந்நிலையில் ஐசிசி 2023-ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையை தேர்வு செய்து அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனையாக வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 2023ம் ஆண்டில் 14 டி20 போட்டிகளில் ஆடி 700 ரன்கள் மற்றும் 19 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.


மேலும் செய்திகள்