ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற இலங்கை வீரர்...!
|ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது ஆஸ்திரேலிய வீராங்கனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்தது.
அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், இலங்கையின் வனிந்து ஹசரங்கா, ஜிம்பாப்வேயின் சீன் வில்லியம்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது.
அதேபோல் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு இங்கிலாந்தின் டாமி பியூமண்ட், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹேலி மேத்யூஸ் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது.
இவர்களில் அதிக வாக்குகள் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கையின் வனிந்து ஹசரங்காவும், சிறந்த வீராங்கனையாக ஆஷ் கார்ட்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.