< Back
கிரிக்கெட்
3 வருடங்களுக்கு பின் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட இலங்கை முன்னணி வீரர்.. காரணம் என்ன?

image courtesy; AFP

கிரிக்கெட்

3 வருடங்களுக்கு பின் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட இலங்கை முன்னணி வீரர்.. காரணம் என்ன?

தினத்தந்தி
|
2 March 2024 8:51 AM IST

வங்காளதேசம் - இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 4-ம் தேதி தொடங்க உள்ளது.

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இலங்கை அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த குசல் பெரேரா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடைசி நேரத்தில் விலகினார்.

இவரது விலகலை தொடர்ந்து அவருக்கு பதிலாக முன்னணி வீரரான நிரோஷன் டிக்வெல்லா மீண்டும் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டிக்வெல்லா 3 வருட இடைவெளிக்கு பின் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக 2021-ம் ஆண்டில் இலங்கை அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடினார். அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இலங்கை அணி விவரம் பின்வருமாறு;-

சரித் அசலன்கா ( முதல் 2 போட்டிகளுக்கான கேப்டன்), வனிந்து ஹசரங்கா ( 3-வது போட்டிக்கான கேப்டன்), குசல் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரம, மேத்யூஸ், தீக்சனா, தனஞ்சயா டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, மதுஷங்கா, நுவான் துஷாரா, பதிரனா, அகிலா தனஞ்சயா, பினுரா பெர்னண்டோ, கமிந்து மெண்டிஸ், அவிஷ்கா பெர்னண்டோ மற்றும் ஜெப்ரி வாண்டர்சே.

மேலும் செய்திகள்