< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பரிசுத்தொகை இத்தனை கோடியா.?
கிரிக்கெட்

உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பரிசுத்தொகை இத்தனை கோடியா.?

தினத்தந்தி
|
19 Nov 2023 5:46 PM GMT

இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

அகமதாபாத்,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இதையடுத்து வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையும், வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதேபோன்று 2-வது இடம் பிடித்துள்ள இந்திய அணி வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.33 கோடி ஆகும். இதேபோன்று ரன்னர் பட்டம் பெற்றுள்ள இந்திய அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 16 கோடி) பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறிய நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 6.50 கோடி பரிசுத் தொகையும், லீக் சுற்றுடன் வெளியேறிய 6 அணிகளுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ. 83 லட்சம்) பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்