< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
புத்த மத துறவியான தலாய்லாமாவை, குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்ற நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள்..!
|24 Oct 2023 11:29 AM IST
புத்த மத துறவியான தலாய்லாமாவை நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தர்மசாலா,
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்திய அணி கடந்த 22ம் தேதி நியூசிலாந்தை தர்மசாலாவில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் அபார பேட்டிங்கால் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கு பின்னர் நியூசிலாந்து தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இதே மைதானத்தில் சந்திக்கிறது.
இந்நிலையில் தர்மசாலாவில் தங்கியுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இன்று தங்களது குடும்பத்தினருடன் சென்று புத்தமத துறவியான தலாய்லாமாவை சந்தித்துள்ளனர். இந்த போட்டோவை தலாய்லாமா தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.