< Back
கிரிக்கெட்
ஐசிசி 2023-ம் ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற நியூசிலாந்து ஆல்ரவுண்டர்

Image Courtesy: @ICC/ icc-cricket.com

கிரிக்கெட்

ஐசிசி 2023-ம் ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற நியூசிலாந்து ஆல்ரவுண்டர்

தினத்தந்தி
|
24 Jan 2024 4:11 PM IST

ஐசிசி 2023-ம் ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற வீரரை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர், சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023-ம் ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்து இருந்தது.

அதன்படி இந்த விருதுக்கு நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா, தென் ஆப்பிரிக்காவின் ஜெரால்டு கோட்ஸி, இலங்கையின் தில்சன் மதுஷன்கா, இந்தியாவின் இளம் அதிரடி ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

இந்நிலையில் ஐசிசி 2023-ம் ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற வீரரை தேர்வு செய்து அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதை நியூசிலாந்தின் இளம் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா வென்றுள்ளார்.


மேலும் செய்திகள்