சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நியூசிலாந்து அதிரடி வீரர்
|நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்காத அவர் உலகெங்கிலும் நடைபெறும் டி20, டி 10 போன்ற கிரிக்கெட் லீக்குகளில் ஆடி வந்தார்.
வெல்லிங்டன்,
நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் காலின் முன்ரோ. வயது 37. இவர் நியூசிலாந்து அணிக்காக 123 சர்வதேச போட்டிகளில் ( 1 டெஸ்ட், 57 ஒருநாள், 65 டி20) ஆடியுள்ளார். இவர் நியூசிலாந்து அணிக்காக கடந்த 2013ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.
இவர் கடைசியாக 2020ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஆடினார். அதன் பின்னர் நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்காத அவர் உலகெங்கிலும் நடைபெறும் டி20, டி 10 போன்ற கிரிக்கெட் லீக்குகளில் ஆடி வந்தார்.
அதிரடி வீரரான அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3 சதங்கள் அடித்துள்ளார். இதையடுத்து அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார்.
ஆனால் அவருக்கு நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.