< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்..!!
|18 Sept 2023 3:32 PM IST
இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க நியூசிலாந்து அணி புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது.
வெலிங்டன்,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்நிலையில் உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள நியூசிலாந்து அணி புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் ( முன்பு டுவிட்டர்) தளத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் லாக்கி பெர்குசன் மற்றும் டிரென்ட் போல்ட் மற்றும் விக்கெட் கீப்பர் டாம் லாதம் ஆகியோர் புதிய ஜெர்சியை அணிந்திருந்த புகைப்படத்தை பதிவிட்டு அறிமுகப்படுத்தி உள்ளது.