< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய வீரர்களின் உடைமாற்றும் அறையிலுள்ள பலகையில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்களின் பெயர்கள்!
|26 Dec 2023 5:59 PM IST
ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று மெல்போர்ன்.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று மெல்போர்ன். அங்கு தற்போது ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் உடைமாற்றும் அறையை கேமராமேன் ஒருவர் படம் பிடித்தார். அப்போது அங்கே ஒரு பெரிய பலகையில் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களின் பெயர் பட்டியல் இருந்தது. அதை உற்று நோக்கியபோது அந்த பட்டியலில் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சோபர்ஸ், வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் ஆகியோருடைய பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் அந்தப் பட்டியலில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்சர் படேல் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.