< Back
கிரிக்கெட்
போட்டி 16 ஓவர்களாக குறைப்பு... கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு தேர்வு
கிரிக்கெட்

போட்டி 16 ஓவர்களாக குறைப்பு... கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
11 May 2024 3:38 PM GMT

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்

கொல்கத்தா,

17-வது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 59 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மழை பெய்த காரணத்தால் இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மழை நின்றதால் போட்டி மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்