< Back
கிரிக்கெட்
போட்டி முடிந்ததும் மைதானத்திலேயே இருங்கள்...ரசிகர்களுக்கு சென்னை அணி வேண்டுகோள்
கிரிக்கெட்

போட்டி முடிந்ததும் மைதானத்திலேயே இருங்கள்...ரசிகர்களுக்கு சென்னை அணி வேண்டுகோள்

தினத்தந்தி
|
12 May 2024 4:08 PM IST

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

சென்னை,

17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி , ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில், இந்த போட்டி முடிந்ததும் சென்னை அணி ரசிகர்கள் மைதானத்திலேயே இருக்க வேண்டுமென்று சென்னை அணி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது . ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்று இருக்கிறது எனவும் சென்னை அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.ஐ.பி.எல். புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று தற்போது 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்