வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியிலிருந்து நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர் விலகல்..!
|நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 17ம் தேதி தொடங்க உள்ளது.
வெலிங்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வங்காளதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆட உள்ளது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 17ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் காயம் காரணமாக முதலாவது ஒருநாள் போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயம் சரியான பின் 2-வது போட்டியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு பதிலாக அறிமுக வீரர் பென் சியர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி விவரம் பின்வருமாறு;- டாம் லாதம், ஆதி அசோக் (2 மற்றும் 3 போட்டிகள்), பின் ஆலன், டாம் ப்ளூன்டெல், கைல் ஜாமிசன், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டபி, ஆடம் மில்னே, ஹென்றி நிக்கோல்ஸ், வில் ஓ ரூர்க், ரச்சின் ரவீந்திரன். (போட்டி 1), வில் யங், பென் சியர்ஸ்