< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி - சிட்னியில் நாளை தொடக்கம்..!

Image Courtesy: @CricketAus / @TheRealPCB

கிரிக்கெட்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி - சிட்னியில் நாளை தொடக்கம்..!

தினத்தந்தி
|
2 Jan 2024 3:40 AM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன. அந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தாயகம் திரும்பும் முனைப்புடன் உள்ளது.

அதேவேளையில் நாளை தொடங்கும் ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் ஆஸ்திரேலியா அணி உள்ளது. அதுவும் இது வார்னரின் கடைசி டெஸ்ட் என்பதால் அவரை வெற்றியோடு வழியனுப்பி வைக்க ஆஸ்திரேலிய வீரர்கள் வரிந்து கட்டுவார்கள் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு இந்த டெஸ்ட்போட்டி தொடங்குகிறது.

மேலும் செய்திகள்