< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி...புதுமுக வீரரை களம் இறக்க பாகிஸ்தான் முடிவு..!
|1 Jan 2024 3:25 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி கண்டு தொடரையும் பறிகொடுத்தது.
சிட்னி,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி கண்டு தொடரையும் பறிகொடுத்தது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை மறுதினம் தொடங்குகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் ரன் எடுக்க முடியாமல் திணறுவதால் கடைசி டெஸ்டில் அவருக்கு பதிலாக புதுமுக வீரர் சைம் அயுப்பை களம் இறக்க பாகிஸ்தான் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
21 வயதான சைம் அயுப் டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை. 8 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் மட்டும் ஆடியிருக்கிறார். இதே போல் ஹசன் அலிக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர்கள் அப்ரார் அகமது அல்லது சஜித் கான் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.